சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - வனத்துறையினர் கண்காணிப்பு
தாளவாடி மலைப்பகுதியில் வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஜீரஹள்ளி வனச்சரகர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் புலியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.