பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நக்கீரன் கோபால் வழக்கு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறினார்.;
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நக்கீரன் கோபால், வழக்கு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறினார். பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இது தொடர்பான ஆதாரங்கள், ஆவணங்கள் இருப்பதாக கூறி நக்கீரன் இதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி ஆதாரங்கள் இருந்தால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று ஆஜரான அவர், சிபிசிஐடி விசாரித்த முறை சரியில்லை என்றும், ஆனால் சிபிஐ சரியான முறையில் விசாரிப்பதாகவும் தெரிவித்தார். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவர் என்றும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.