தஞ்சை : பாகவத மேளா நாடக விழா தொடக்கம்
தஞ்சை அருகே மெலட்டூரில் பாரம்பரியமிக்க பாகவத மேளா நாடக விழா தொடங்கியுள்ளது.;
தஞ்சை அருகே மெலட்டூரில் பாரம்பரியமிக்க பாகவத மேளா நாடக விழா தொடங்கியுள்ளது. மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நாடக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலய வளாகத்தில் நடைபெறும் விழாவில், பிரகலாதா சரித்திரம், அம்பலத்தில் ஆடும் ஜோதி, ஹரிச்சந்திரா, உள்ளிட்ட நாடகங்கள் நடைபெறும். இரவும் தொடங்கும் நாடகம் அதிகாலை வரை நடைபெறும்.