சத்தியமங்கலத்தில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி

சத்தியமங்கலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Update: 2019-05-08 18:43 GMT
சத்தியமங்கலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக அக்னி வெயிலில் அவதிப்பட்டு வந்த மக்கள்,மழை பெய்து கோடை வெப்பம் தணிந்ததால் நிம்மதி அடைந்துள்ளனர்.

மதுராந்தகத்தில் சூறைக்காற்றுடன் மழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மதுராந்தகம் கருங்குழி,மொரப்பாக்கம்,பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உண்டாகி உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்

அரியலூரில் ஜெயங்கொண்டம்,கைகாட்டி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.அப்போது பலத்த சூறைக்காற்று வீசியதால்,மாதாபுரம் கிராமத்தை சேர்ந்த குழந்தைசாமி 3 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்து விழுந்தன.சூறைகாற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பலத்த சூறைக்காற்று வீசியதில் வாழை மரங்கள் சாய்ந்தன

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, வீசிய பலத்த சூறைக்காற்றில், ஏராளமான வாழை மரங்கள், மின்கம்பங்கள், சாய்ந்தன. சீலைப்பிள்ளையார் புத்தூரில் காலை முதல் வீசிய பலத்த காற்றில், ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும் சேதமடைந்தன.இது குறித்து தகவலறிந்த முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் கோட்டாட்சியர் சேதத்தின்  மதிப்பீட்டை உடனடியாக கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொட்டியம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் சேதமானதால் சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்