கோயம்பேடு கொலை வழக்கு : எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸ் விசாரணை

கோயம்பேட்டில் நடைபெற்ற கொலை தொடர்பாக, பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-06 13:54 GMT
சென்னை கோயம்பேடு லெமன் மார்க்கெட் பகுதியில் நேற்று இருவருக்கிடையே நடந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது, இறந்து கிடந்தவரின் அருகில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்ததால் தொடர்ந்து விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், அவர் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில், கே.கே.நகர் பகுதியில் விசாரித்த போது, அவர், பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா என தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு கொலையில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த பிரான்சிஸ் கிருபா, 7 கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். 'வெண்ணிலா கபடி குழு', 'அழகர் சாமியின் குதிரை' உள்ளிட்ட 16 படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தற்போது பைரி எனும் திரைப்படத்தில் பிரான்சிஸ் கிருபா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்