கையும் களவுமாக சிக்கிய ஆடு திருடன்...திருடனை நையப்புடைத்த பொதுமக்கள்
திருவெறும்பூர் அருகே கையும் களவுமாக பிடிப்பட்ட ஆடு திருடனை நையப்புடைத்த பொதுமக்கள், அந்த நபரை போலீஸில் ஒப்படைத்தனர்.;
கீழக்குறிச்சி கிராமத்தில், ஒரு வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடுகளை, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருட முயன்றனர். ஆட்டின் சத்தம் கேட்டு, விழித்த பொதுமக்கள், திருடனை பிடித்து அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரிடம் ஆடு திருடன் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில், திருச்சியை சேர்ந்த பிரபு என்பதும், மயக்க பிஸ்கட் கொடுத்து இதுவரை 114 ஆடுகள் திருடப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த நபர் மீது 30க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குள் நிலுவையில் இருக்கிறது. பிடிபட்ட நபர் அளித்த தகவலின் அடிப்படையில் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.