நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2019-04-30 08:09 GMT
ஆலங்குளத்தை சேர்ந்த ராஜசேகர், தனது 3 வயது மகள் தன்யா மற்றும் உறவினர்கள் முருகன், நிரஞ்சன் குமார், நடராஜன் ஆகியோருடன் திருமண விருந்திற்காக, கறி வாங்குவதற்காக காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போராடி காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்