தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் - ஸ்டாலின்

3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா மனு அளித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-27 01:59 GMT
3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா மனு அளித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அரசு கொறடா அளித்த மனு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க கூடாது என்றும், பாரபட்சமற்ற முறையில் சபாநாயகரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் அவர்  மேற்கோள் காட்டியுள்ளார். ஒருவேளை நடுநிலைமை தவறி, சபாநாயகர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் ஸ்டாலின்  எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்