அறிவுரைக் கழகத்தில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் ஆஜர்

திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் சிறப்பு நீதிமன்ற அறிவுரைக் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

Update: 2019-04-10 19:15 GMT
பொள்ளாச்சி பாலியல்  வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, வசந்தகுமா​ர், சதீஷ், சபரிராஜன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் மீது கடந்த மார்ச்  12 ஆம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது .இந்நிலையில், 4 பேரையும்,சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்ற அறிவுரைக் கழகம் முன்பு இன்று போலீசார் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர்.அறிவுரைக் கழகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராமர் மற்றும் உறுப்பினர்களான ஓய்​வு பெற்ற நீதிபதிகள் மாசிலாமணி, ரகுபதி ஆகியோர் அவர்களிடம் 2 முதல் 5 நிமிடங்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையின் போது கைது செய்யப்பட்ட நபரின் தாய், தந்தை அல்லது மனைவி ஆகிய 3 உறவுகளில்  ஒருவர் மட்டும் விசாரணையின் போது அனுமதிக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் விசாரணையின் போது அனுமதிக்கப்படவில்லை . குண்டர் சட்டம் முறையாக போடப்பட்டதா அல்லது உள்நோக்கத்தோடு போடப்பட்டதா என்றும், பழிவாங்கும் அடிப்படையில் போடப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த விசாரணையின் அடிப்படையில் குண்டர் சட்டம் தொடர்வதும்,ரத்து செய்வதும் அமையும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.முதல் தகவல் அறிக்கை மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் மிகைப்படுத்தப்பட்ட அளவில் இருக்கிறதா என்பதையும் அறிவுரைக் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்