அடுத்தடுத்து இருவரை கத்தியால் குத்திய மர்ம நபர் : காரணம் என்ன?
திருப்பூரில் அடுத்தடுத்து இருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிம் ஒப்படைத்தனர்.;
திருப்பூரில் அடுத்தடுத்து இருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிம் ஒப்படைத்தனர். திருப்பூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்த கணேஷ் பாண்டி என்பவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திச்சென்றதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அதே பகுதியில், பெட்ரோல் பங்க் உரிமையாளரும், அமமுக பகுதி கழக செயலாளருமான ரமேஷ் என்பவரையும் அந்த மர்ம நபர் கத்தியால் குத்திச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், மர்ம நபர் சாலையில் ஒருவரை கத்தியால் வெட்டுவதை கண்ட பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.