சூலூர் எம்.எல்.ஏ மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கனகராஜ் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக இரங்கல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.