ஹேக்கத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த ஈரோடு மாணவர்கள்

ஈரோட்டு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் இணைந்து ஸ்வாட் ஹெல்ப் என்ற மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தரத்தினை கண்டறியும் தானியங்கி கருவியை கண்டுபிடித்தனர்.

Update: 2019-03-09 07:43 GMT
ஈரோட்டு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் இணைந்து ஸ்வாட் ஹெல்ப் என்ற மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தரத்தினை கண்டறியும் தானியங்கி கருவியை கண்டுபிடித்தனர்.  இந்நிலையில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் ஹேக்கத்தான் போட்டியில் இந்த கண்டுபிடிப்புக்கு முதலிடம் கிடைத்துள்ளது.  மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலிடம் பெற்றதற்கான பரிசுத் தொகை ரூ.75 ஆயிரம் அளிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் குழுவினருக்கு கல்லூரி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
 
Tags:    

மேலும் செய்திகள்