விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ : கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை தொடர்ந்து அதிரடி

Update: 2019-03-07 00:21 GMT
திருப்பூரில், விவசாயிகளிடம் கிராம நிர்வாக அலுலவர் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து,அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.   திருப்பூர் ஊத்துக்குளி கூனம்பட்டி பகுதி கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் என்பவர், இந்த திட்டத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயிகளிடம் லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.  அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்