10 வயது மகளுடன் முதியவர் தற்கொலை முயற்சி

மகன்கள் அடித்து விரட்டியதாக, 10வயது மகளுடன் தற்கொலை செய்துகொள்ள வந்த முதியவரை ராமேஸ்வரம் போலீசார் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.;

Update: 2019-03-03 11:08 GMT
மகன்கள் அடித்து விரட்டியதாக, 10வயது மகளுடன் தற்கொலை செய்துகொள்ள வந்த முதியவரை ராமேஸ்வரம் போலீசார் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். கடலூர் மாவட்டம் கத்தியநல்லூரைச் சேர்ந்த முதியவர் முத்துவை, வீட்டை எழுதி தரும்படி அவரது மகன்கள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், தமது 10 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், ராமேஸ்வரம் கடற்கரையில் தற்கொலை செய்வதற்காக சென்றார். அப்போது, தனியாக இருந்த சிறுமியிடம் பத்திரிகையாளர்கள் நடத்திய விசாரணைக்கு பிறகு போலீசாரின் உதவியுடன் பெரியவர் முத்து மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்