குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை வருகை
3 நாள் பயணமாக, கோவை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது;
டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர், பிற்பகல் 3.30 மணியளவில் கோவை விமானநிலையம் வந்தடைந்தார். அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் வேலுமணி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். நாளை காலை சூலூர் விமான படைத்தளத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியிலும், மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியிலும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி கோவையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன