தானியங்கி நீர் மூழ்கி சாதனம் உருவாக்கி மாணவர்கள் சாதனை...

தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், நீருக்கு அடியில் பல்வேறு ஆய்வுகளுக்கு பயன்படும், நீர் மூழ்கி சாதனம் ஒன்றை உருவாக்கி சாதனை.

Update: 2019-02-01 04:59 GMT
சிங்கப்பூரில் மார்ச் 7 ஆம்  தேதி நடைபெற உள்ள அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான போட்டியில் உலகம் முழுவதும் இருந்து, 40 குழுவினர் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள, இந்த நீர்மூழ்கி இயந்திரமும் தேர்வாகியுள்ளது. இந்த இயந்திரத்திற்கு, மிஸ்டஸ் ஒன் பாய்ண்ட் சீரோ என பெயர் வைத்துள்ளனர்.இதில், கேமரா, மோட்டார்கள்,  மின்சாரத்தை சேமிக்கும் மின்கலன் உள்ளிட்ட பல சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, நீருக்கு அடியில் மூழ்கி உயிரிழக்கும் மனிதர்களை மீட்பது, அணைகளின் விரிசல், தாவரங்களை பற்றி படிப்பது, நீர் மாசு அடைவதை கண்டறிவது என பல தேவைகளுக்கு பயன்படும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில், பணிகளை நிறைவு செய்து, சிங்கப்பூர் போட்டியில் இந்தியாவை பெருமையடைய செய்வோம் என மாணவர்கள் கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்