தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.;

Update: 2019-01-31 12:41 GMT
தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர்களை கவுரவிக்கும் நிகழ்வு சென்னை ஓமாந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் 7 ஆயிரத்து 904 பயனாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்