ஆன்லைன் மருந்து விற்பனை வழக்கு: தடை நீக்க உத்தரவு மார்ச் 20 வரை நீட்டிப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மார்ச் 20ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.;

Update: 2019-01-29 20:34 GMT
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. 

இதன் விசாரணையின் போது, தனி நீதிபதியின் இந்த தடை உத்தரவால் ஆன் லைன் மருந்து நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்கி நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதிய விதிகளை அறிவிக்க மத்திய அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை, ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு விதித்த தடையை நீக்கிய உத்தரவையும் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்