கஜா புயல் பாதிப்பு: நிதி வழங்கப்பட்ட விவரம் தாக்கல்

கஜா புயல் பாதிப்பில் யாருக்கு, எவ்வளவு நிதி எதற்காக வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு உயர்நீதிமன்றக் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-29 20:29 GMT
இதுதொடர்பான  வழக்கை நீதிபதிகள் சசிதரன் ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. 

அதில், பேரிடர் மீட்புக்குழு ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், மத்திய அரசு ஆயிரத்து 146 புள்ளி 12 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், கால்நடை இழப்புக்கு 14 புள்ளி 21 கோடி, குடிசை உள்ளிட்ட வீடுகள் சேதத்துக்கு 338 புள்ளி 46 கோடி, வாழ்வாதார நிதியாக 319 புள்ளி 78 கோடி, விளைபயிர் சேதத்துக்கு 505 புள்ளி 72 கோடி, தோட்டக்கலை பயிர்களுக்கு 30 புள்ளி 89 ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

அப்போது, நிதி உரியவர்களுக்கு சேரவில்லை என எதிர்மனுதாரர்கள் கூறினார். இதைத் தொடர்ந்து,  யாருக்கு, எவ்வளவு நிதி, எதற்காக வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வி.ஏ.ஓ. வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பலகை வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்