கர்ப்பிணி பெண்ணுக்கு வேலை வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் ஓட்டபந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-19 13:34 GMT
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு கடந்த 2018 அக்டோபர் மாதம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கர்ப்பிணிப்பெண் தேவிகா, ஓட்ட பந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்ததாக கூறி, அடுத்த கட்ட தேர்வுக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் தமக்கு பணி வழங்க கோரி, தேவிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி விமலா முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் போலீசாருக்கு பதவி உயர்வு தேர்வு தொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டிய, நீதிபதி, மனுதாரரை இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு சீருடைய பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்ய உத்தரவிட்டார். மேலும், பிரசவத்துக்குப் பின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை அவருக்கு தனியாக நடத்த வேண்டும் என்றும் நீதிபதி விமலா உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்