விற்பனையாகாத கரும்புகள் : பொங்கலை மறந்த விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள், பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.;

Update: 2019-01-15 08:21 GMT
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் காரணமாக டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பில் இருந்து எஞ்சிய கரும்புகளை வாங்குவதற்கு வியாபாரிகள் யாரும் முன்வராததால் விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் வயலிலேயே காத்துக் கிடக்கும் அவலநிலை உள்ளது. ஆண்டுதோறும்  அனைத்து கரும்புகளும் விற்பனையாகி பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி வந்த விவசாயிகள்,  இந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பு ஒருபுறமிருக்க, கரும்புகளை வாங்குவதற்கும் ஆட்கள் வராததால் வேதனையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்