பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதி விபத்து

இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் படுகாயம்

Update: 2019-01-09 14:21 GMT
மதுரையில், பிரேக் பிடிக்காத அரசு பேருந்து  மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.   ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் சிறப்பு பேருந்து,  இன்று காலை பெரியார் பேருந்து நிலைய மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பிரேக் பழுதான காரணத்தால் முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதியதால் இரு சக்கர வாகனத்தில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்தனர்.  விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன்,  நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பேருந்து சக்கரத்தில் மாட்டி இருந்த இரு சக்கர வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்