தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2019-01-08 21:00 GMT
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது.

காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் இல்லை எனவும், சிபிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமெனவும், தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜூனன் உட்பட 7 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இது தொடர்பாக வரும் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்