திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து- அமமுக துணை பொது செயலாளர் தினகரன் விமர்சனம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜனநாய நடைமுறைகள் கேலிக் கூத்தாக்கப் பட்டுள்ளதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்

Update: 2019-01-07 08:00 GMT
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜனநாய நடைமுறைகள் கேலிக் கூத்தாக்கப் பட்டுள்ளதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு கருத்து  கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தப்பட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இடைத்தேர்தலில் அமமுக தான் வெற்றி பெறும் என்பதை உணர்ந்து, அதிமுகவிற்கு திமுகவும் துணை போவதாகவும், அது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுவதாகவும் தினகரன் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்