வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபம் உள்ளதா? - உயர்நீதிமன்றம்

மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக்கும் வழக்கில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-01-03 09:33 GMT
வேதா இல்லத்தை, நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு பிறப்பித்த ஆணைக்கு எதிராக டிராபிக் ராமசாமி, மற்றும் எம்.எல்.ரவி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், ஜெயல‌லிதா வரி பாக்கி  ஏதேனும் வைத்துள்ளாரா, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஆட்சியபனை உள்ளதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.தொடர்ந்து அரசு மற்றும் தனியார் சொத்துக்களை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்த விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜனவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்