வடமாநில இளைஞர் மீது கொடூர தாக்குதல் - வெளியான பகீர் காட்சி -திருப்பத்தூரில் அதிர்ச்சி

Update: 2025-12-21 10:16 GMT

திருப்பத்தூர் அருகே வடமாநில இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய ஹாலோ பிரிக்ஸ் உரிமையாளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்த நெப்போலியன் என்பவர் மைக்காமேடு பகுதியில் ஹாலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அங்கு வடமாநில இளைஞர்கள் வேலை பார்த்து வரும் நிலையில், அரவிந்த் மாஞ்ஜே என்பவர் ஊருக்கு செல்வதாக கூறி விட்டு எதிரில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நெப்போலியன், வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் உரிமையாளர் நெப்போலியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்