Villupuram | 26 பயணிகளுடன் விபத்தில் சிக்கிய பேருந்து - பதற வைக்கும் வீடியோ
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தடுப்பு கட்டையில் தனியார் சொகுசு பேருந்து மோதி 26 பயணிகள் காயமடைந்த நிலையில் விபத்தின் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது...
சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு பேருந்து நேற்று அதிகாலை விக்கிரவாண்டி அருகே சென்று கொண்டிருந்தபோது சங்கராபரணி ஆற்றின் தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கியது.
ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நேர்ந்த இந்த விபத்தில் 26 பயணிகள் காயமடைந்தனர்.