ஜெயலலிதா மரணம் : "அதிகாரிகளை பலிகடா ஆக்க முயல்வது கண்டனத்திற்குரியது" - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்குவது கண்டனத்துக்குரியது என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.;

Update: 2019-01-02 09:25 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்குவது கண்டனத்துக்குரியது என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் கூறும்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரித்துவரும் நிலையில், அமைச்சர்கள் விசாரணையை திசை திருப்பும் வகையில் செயல்படுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். இது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவக் குழுவினருக்கு மன வேதனையையும், அச்சத்தையும் உருவாக்கும் வகையில் இருப்பதாகவும், கண்டனத்திற்குரியது எனவும் அவர் கூறினார். 

இந்த விவகாரத்தில் அரசியல் நோக்கங்களுக்காக, தங்களுக்கு கீழ் பணிபுரியும் அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்குவது ஏன்? எனவும், சிகிச்சையில் குறைபாடு இருந்தால், அப்போது முதல்வரின் பொறுப்புகளை வகித்த பன்னீர்செல்வம், அவரை வேறு மருத்துவமனைக்கோ, வெளிநாட்டு மருத்துவமனைக்கோ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்