கலப்பு திருமணம் செய்துக்கொண்ட காதலர்கள் : பாதுகாப்பு வழங்ககோரி ஆட்சியரிடம் மனு

பெண் வீட்டார் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி, காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Update: 2018-12-31 13:13 GMT
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சரவணனும், திண்டுக்கல்லை சேர்ந்த சண்மதியும் ஒரு ஆண்டாக காதலித்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் திருமணத்துக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சரவணன் வீட்டினரின் சம்மதத்தோடு நேற்று இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பெண் வீட்டார் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு அளிக்க கோரி, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்தம்பதி தஞ்சம் அடைந்தனர். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நடந்த பேச்சுவார்த்தையின் போது இருவீட்டாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உரிய பாதுகாப்பு வழங்க கோரி, இளம்தம்பதி மற்றும் சரவணனின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனிடம் மனு அளித்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்