ஹெத்தை அம்மன் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் குண்டம் இறங்கி சிறப்பு வழிபாடு

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஹெத்தை அம்மன் திருவிழாவை முன்னிட்டு, விரதம் மேற்கொண்டவர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர்.;

Update: 2018-12-28 13:08 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஹெத்தை அம்மன் திருவிழாவை முன்னிட்டு, விரதம் மேற்கொண்டவர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர். நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டு தோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான பூஜையில், காரக்கொரை மடிமனையில் நடைபெற்ற பூக்குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு பூஜைக்கு பின்னர், பக்தர்கள் குண்டம் இறங்கி, வழிபாடு நடத்தினர். பின்னர், ஆடல் பாடல்களுடன் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்