ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல் - தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

Update: 2018-12-18 03:10 GMT
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் பேருந்து நிலையம் முன்பாக திரண்ட போராட்டக்குழுவினர் கைகளில் பதாகைகள் ஏந்தியதோடு கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக செல்ல முயன்றனர்.   தடையை மீறி அவர்கள் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்