வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மையம் : 3 பேர் கைது

திருவண்ணாமலையில் வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மையம் நடத்தி வந்த பெண், அவரது கணவர் உட்பட 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.;

Update: 2018-12-02 09:15 GMT
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வீட்டில் ஸ்கேன் மையம் நடத்தி வந்தவர், ஆனந்தி. அவருக்கு உறுதுணையாக அவரது கணவர் தழிழ்செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமார் ஆகியோர் கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் அனுமதியின்றி வைத்திருந்த ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்தனர். அங்கு நோயாளிகளை தங்க வைக்க அறைகள் கட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியைடந்த அவர்கள், பாலின தேர்வு தடை சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்தனர். ஏற்கனவே ஆனந்தி,கருக்கலைப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்