கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு கேட்கும் பரிதாபம்

பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு கேட்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Update: 2018-11-22 07:26 GMT
கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த துர்கா நகர் பலத்த சேதம் அடைந்துள்ளது. குடிசை வீடுகள் அனைத்து தரைமட்டமாகிவிட்டன. 

வீடுகளை இழந்து தவிக்கும் நரிக்குறவ மக்கள், பேருந்து நிறுத்தங்களிலும், சேதமான குடிசைகளுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர். உணவு கிடைக்காத அவர்கள், பேராவூரணி பட்டுக்கோட்டை - சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு கேட்டு வருகின்றனர்.   

இந்நிலையில், அப்பகுதி வழியாக சென்ற ஐஏஎஸ் அதிகாரி மேகநாதனின் வாகனத்தை வழிமறித்த மக்கள், உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வலியுறுத்தினர்.  இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட மேகநாதன், உடனடியாக உணவு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்