பண்ணாரி அம்மன் கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு அன்பளிப்பு - சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பணம் பெற்றுக் கொண்டு தேங்காய் உடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் பூஜைக்காக கொண்டு செல்லப்படும் தேங்காய்களை உடைப்பதற்கு கட்டணம் கிடையாது என தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேங்காய் உடைப்பதற்கு நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 முதல் 10 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு தேங்காய் உடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.