"ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை" - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்

ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்

Update: 2018-11-13 20:02 GMT
ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப்பிரிவு டாக்டர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், ரைமண்ட் டொமினிக் சேவியோ, செந்தில்குமார் மற்றும் அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா வெங்கட்ராமன், நுரையீரல் சிகிச்சை நிபுணர் நரசிம்மன் ஆகியோர் குறுக்கு விசாரணைக்காக ஆஜராகினர். மொத்தம் 3 மணி நேரம் நடந்த விசாரணையில், டாக்டர்கள் அளித்த விளக்கத்தை, நீதிபதி ஆறுமுகசாமி பதிவு செய்து கொண்டார். இதனிடையே, ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் அளிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்