வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி சோதனை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி சோதனையில் 44 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2018-11-01 19:00 GMT
கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  

ஓசூர்

ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஆர்.டி.ஒ.சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் 
8 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராமல் இருந்த ஒரு லட்சத்து 
32 ஆயிரத்து 20 ரூபாய் பணம் சிக்கியது.

கடலூர்

கடலூர் கேப்பர் மலையில் செயல்பட்டுவரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 13 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியது. சந்தேகப்படும் நபர்களையும் பிடித்து  விசாரணை நடத்தப்பட்டது.சோதனையின் நிறைவில் கணக்கில் வராத  4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

இதே போல், தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில்  வராத பணம், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 647 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்