தூத்துக்குடி : மத்திய அரசு திட்டங்களின் வளர்ச்சி பணி குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் ரத்து
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மத்திய அரசு திட்டங்களின் வளர்ச்சி பணி குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.;
கூட்டம் திடீரென ரத்துசெய்யப்பட்டதை கண்டித்து, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் அலுவலர் வீரப்பன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.