சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சாக்கடைகளில் தூர் அகற்றப்படாதால், சாக்கடை கழிவுகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Update: 2018-10-24 12:15 GMT
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சாக்கடைகளில் தூர் அகற்றப்படாதால், சாக்கடை கழிவுகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் பரவி வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.
இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்த  மக்கள் புகைப்பட ஆதாரத்தோடு சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்