குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா..!

திருச்செந்தூர் அருகே குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் காளி வேடமணிந்த பக்தர்கள் அம்மன் அருளைபெற ஆக்ரோசமாக ஆடினர்.

Update: 2018-10-16 21:20 GMT
திருச்செந்தூர் அருகே குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் காளி வேடமணிந்த பக்தர்கள் அம்மன் அருளைபெற ஆக்ரோசமாக ஆடினர். இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 7-ம் திருநாளான திருச்செந்தூர் பகுதியில் பல்வேறு வேடங்கள் அணிந்து தசரா செட்டுகள் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூல் செய்தனர். ஒவ்வொரு தசரா செட்டிலும் காளி, அம்மன், ஆஞ்சிநேயர், குரவன், குரத்தி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள் வலம் வந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்