"நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வளவு பெரிய கட்டடங்களாக இருந்தாலும், அதனை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-12 03:14 GMT
மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உயர்நீதிமன்ற மதுரைக் 
கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து நேரில் ஆஜரான ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். 

அப்போது, நீதிபதிகள், மதுரை மாவட்டத்தில் முக்கிய கண்மாய்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டனர். 

இதேபோல 5 மாவட்டங்களிலும்  மாவட்ட வருவாய் ஆய்வாளர், பொதுப்பணி செயற்பொறியாளர்கள் தலைமையில் குழு அமைத்து ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புகளில் எவ்வளவு பெரிய கட்டடங்கள் இருந்தாலும் அதனை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது எனவும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்