சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் கூட்டு பிரார்த்தனையுடன் கூடிய அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.

Update: 2018-10-09 09:24 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் கூட்டு பிரார்த்தனையுடன் கூடிய அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தில், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.  108 அடி நீள பேனர் மற்றும் விளக்குகளை ஏந்தியபடி, 50 வயது வரை சபரிமலை செல்லமாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் இஸ்லாமிய மாணவி ஒருவரும் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்