கன மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக வராக நதியோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-09 07:45 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக வராக நதியோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக சோத்துப்பாறை அணை நிரம்பி வழியும் நிலையில், கல்லாறு, கும்பக்கரை பாப்பாறு, செலும்பு ஆறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்து வரும் வெள்ள நீரானது பெரியகுளம் வராக நதியில் சென்று சேருகிறது. இதனால் வராகநதி கரையோர பகுதியில் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்