"2 நாட்களில் மிதமான மழை பெய்யும்" - வானிலை மைய இயக்குனர் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2018-10-07 08:23 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். நுங்கம்பாக்கத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த  பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மினிகாய் தீவுக்கு அருகே வட மேற்கில் நிலை கொண்டிருப்பதாகக் கூறினார். அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த  பகுதியானது, 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஓடிஷா நோக்கி நகரும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்