அக்.2 -ந்தேதி விடுப்பு அளிக்காத 2484 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது - தமிழக அரசு

காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 2 ஆயிரத்து 484 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-10-04 03:30 GMT
காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 2 ஆயிரத்து 484 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 ஆம் தேதியன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டதா, பணி புரிவோருக்கு இரட்டை சம்பளம் அல்லது மூன்று தினங்களுக்குள் ஒரு நாள் மாற்றுவிடுப்பு வழங்கப்படுமா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 2 ஆயிரத்து 484 நிறுவனங்களில் விதி மீறல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்