அமெரிக்க அரசியலில் களமிறங்குகிறாரா ரஜினி?
அமெரிக்காவுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.;
சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான தமிழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியலும்வெ ளியிடப்பட்டது.மாவட்டம், வட்டம், ஒன்றியம் என பல்வேறு நிலைகளில் நிர்வாகிகள் நியமனம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது, வட அமெரிக்க மாகாணங்களுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.நியூயார்க், வாஷிங்டன், நியூ ஜெர்சி, அர்கன்சாஸ், கரோலினா, விர்ஜினியா, டெலவர், பென்சில்வேனியா என அனைத்து மாகாணங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.