"மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை"

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

Update: 2018-09-30 18:22 GMT
மதுரை அருகே தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம்,  தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் பெற்றுள்ளார்.

அதில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்தற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக எந்த நிறுவனத்திற்கும் டெண்டர் ஒதுக்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமிட்டபடி அமையும் என சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள், முறைப்படி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

"மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது  உறுதி" - தமிழிசை

மதுரையில்,  எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என தமிழக  பாஜக  தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு நிர்வாக நடைமுறைப்படி விரிவான திட்ட அறிக்கைகள் படிப்படியாக பெற்று, கோப்புகள் தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் தகவல் விரைவில் வரும் என தெரிவித்துள்ளஅவர், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.  தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியவர்,  இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளதை தமிழிசை சுட்டிக்காட்டியுள்ளார். 

"எய்ம்ஸ் அமைப்பதற்காக எந்த நிறுவனத்திற்கும் டெண்டர் ஒதுக்கப்படவில்லை"

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்ற தகவல்  தெரியவந்துள்ளது.

மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம்,  தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இதற்கான விளக்கத்தை பெற்றுள்ளார். அதில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அமைப்பதற்காக எந்த நிறுவனத்திற்கும் டெண்டர் ஒதுக்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்