காவல்துறை, தீயணைப்பு, மீட்ப்புபணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி திறந்து வைத்தார்.

Update: 2018-09-15 08:00 GMT
 மதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி திறந்து வைத்தார். மேலும், சென்னை, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 28 கோடியே 26 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 88 காவலர் குடியிருப்புகள் , தீயணைப்பு  நிலையக் கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

6 விடுதிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்



முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர்,   மற்றும் சிறுபான்மையினர்  மாணவர்களுக்கான 5 விடுதிக் கட்டடங்கள் மற்றும் ஒரு கூடுதல் விடுதிக் கட்டடத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 8 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உதவி ஆய்வாளர் பணிக்கு 215  பேர் தேர்வு



உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் அரசுத் துறை நிறுவனத் தணிக்கைத் துறை ஆகியவற்றில்  உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 215 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில்  அவர்களில் 7 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  பணிநியமன ஆணைகளை வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

ரூ.495.87 கோடி மதிப்பீட்டில் 17 துணை மின் நிலையங்கள் திறப்பு



எரிசக்தித் துறையின் சார்பில்  சென்னை, போரூரில் 245 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விருதுநகர், மதுரை, தருமபுரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 250 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.


Tags:    

மேலும் செய்திகள்