குழந்தைகளை கொலை செய்த தாய்: பாடம் சொல்லும் விலங்குக​ள்..!

கள்ளக்காதலால் பெற்ற குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு தாய் ஒருவர் தரம்தாழ்ந்து போய்விட்ட நிலையில், மிருகங்கள் தனது குட்டிகளை காப்பாற்ற பாச போராட்டம் நடத்தியுள்ளன.

Update: 2018-09-04 04:18 GMT
தகாத உறவு, தவறான நடத்தை உள்ளிட்ட காரணங்களால் பெற்ற குழந்தைகளையே தாய் கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ள நிலையில், மனித மனங்களை ஒப்பிடும் போது, விலங்குகள் உயர்ந்து நிற்கின்றன.

தனது குட்டிகளை காப்பாற்ற விலங்குகள், பறவைகள் பாசப்போராட்டம் நடத்தி வரும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், குடியிருப்பு நுழைவாயிலில் இருந்த கேட் ஒன்றில் மாட்டிக்கொண்ட குட்டியை காப்பாற்ற தாய் கரடி பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் கடந்த மாதம் நிகழ்ந்தது.

அதேபோல் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குரங்கு ஒன்று இறந்துபோன தனது குட்டியை கையில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் அழைந்த  காட்சி,காண்பவர்கள் கண்களில் நீர்க்கோர்க்க செய்தது.

அதேபோல் முதுமலையில் இறந்த குட்டியின் உடல் பக்கத்தில் நின்று கொண்டே இருந்த  காட்டுயானை ஒன்று, யாரையும் அருகே நெருங்க விடாமல் துரத்திய சம்பவமும் சில மாதங்களுக்கு முன்பு அரங்கேறியது.

மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கூட்டமாக உலா வரும் காட்டுயானைகள், தனது குட்டிகளை கண் இமை காப்பது போல பாதுகாத்து அழைத்து செல்கின்றன.

ஆறு அறிவு உள்ள மனிதர்கள், சுயநலத்திற்காகவும், தவறான உறவுக்காகவும், குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு  தரம் தாழ்ந்து போய் விட்ட நிலையில், ஐந்தறிவு விலங்குகள் குட்டிகள் மீது அதிக அன்பும் அக்கரையும் வைத்து அவற்றை பாதுகாக்க போராடி மனித இனத்திற்கே பாடம் சொல்லி கொடுக்கின்றன.


Tags:    

மேலும் செய்திகள்