திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் : தங்கமுத்துக்கிடா வாகனத்தில் குமரவிடங்க பெருமான்...

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை விடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்றிரவு குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

Update: 2018-09-02 06:35 GMT
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை விடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்றிரவு குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

குடியாத்தம் அருகே திருக்கல்யாண வைபவ விழா: 



வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சேம்பள்ளிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலமாக கொண்டு வரப்பட்ட உற்சவர் சிலைகளுக்கு ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவ விழா நடைபெற்றது. இதனையொட்டி இன்னிசைக் கச்சேரிகளும், பஜனைகளும் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராமன் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மணக்குள ஸ்ரீ விநாயகர் கோவில் ஊஞ்சல் உற்சவ விழா:



புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் கோவில் 60 ஆம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. நேற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகர், முடிவில் ஆலய வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் கொளுவிறக்கம் ​செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்