மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு
பதிவு: ஆகஸ்ட் 29, 2018, 01:31 PM
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த நசிமுதினை மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த பணியிட மாற்றத்தால், ஸ்டெர்லைட் வழக்கு விவகாரத்தில் பின்னடைவு ஏற்படும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.